இலங்கை அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படவுள்ள கொழும்பு பெருநகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப செயற்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

இதன்படி, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி கொண்ட நாடாக இலங்கையை உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

2030ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், அணுசக்தி கொண்ட நாடாக மாற்றிக் கொள்வதும் ஒரு நோக்கமாக காணப்படுகின்றது.அது சிவில் பொது மக்களின் பயன்பாட்டின் அவசியத்திற்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பெரு நகரத் திட்டத்தின் கீழ் மாலபே மற்றும் ஹொமாக பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் அதிக தொழிநுட்ப வசதிகளை கொண்ட நகரம் உருவாக்கப்படவுள்ளது.

இதன்மூலம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்திகளை விருத்தி செய்ய கொள்ள சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, பெருநகரத் திட்டத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு சர்வதேசத்தின் ஆதரவும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்திற்காக சர்வதேச அணுசக்தி நிறுவனத்திறன் உதவிகளை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதன் ஊடாக ஆசியாவின் பிரபலமான மற்றும் பலமான நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த திட்டத்தின் மூலம் 37,000 தொழில்வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Facebook Comments