உழவனூரில் தனியார்  காணி 35   ஏக்கர்   இராணுவத்தினருக்கு  மக்கள்  விசனம்
உழவனூர்  பகுதியில்  35 ஏக்கர்   தனியார் காணி  இராணுவத்தினருக்கு   வழங்கப்பட்டுள்ளது
குறித்த  காணிக்கு  உரிமையாளர்  இருந்த  போதும்  15 நாட்களுக்குள்  உரிமை  கோருமாறும்  இல்லையேல்  அரச  உடமை  ஆக்கப்படும்  என  போடப்பட்ட  அறிவித்தலின்  பிரகாரமே  இவ்  காணி  எடுக்கப்பட்டு இராணுவத்தினரின் 11 ஜி ஆர்  படைப்பிரிவிக்கு  வழங்கப்பட்டுள்ளது
   குறித்த  காணி  உரிமையாளர்  வயதானவர்  என்றும்  அவர்  சுகயீனம்  காரணமாக  சிகிச்சை  பெற்று வருகின்றார் என்பதை  தெரிந்து  கொண்டே    இதனை   சாதகமாக  பயன்படுத்தியே   இக்  காணி  எடுக்கப்பட்டுள்ளது என  ஊர்மக்கள்  தெரிவிக்கின்றனர்
இவ்வாறாக  15 நாட்களுக்குள்  அறிவித்தலிட்டு  இராணுவத்தினருக்கு  காணி  வழங்க  முடியும்  என்றால்     காணி  அனுமதி  பத்திரமின்றி  தாங்கள் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருவதாகவும் மீள்குடியேறிய பின்பு 6 வருடமாக தற்காலிக வீட்டில் வாழ்வதாகவும் இதனால் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் முன் பள்ளிகளிலும் தமது வாழ்வை கழிப்பதாகவும்,
 இவ்வாறு  பாதிக்கப்பட்ட  எங்களுக்கு  காணி அனுமதி  பத்திரமோ  வீட்டுத்திட்டமோ  வழங்க  அனுமதிக்காத  சட்டம்  இராணுவத்தினருக்கு  எவ்வாறு  இடமளித்துள்ளது  என  கேள்வி  எழுப்புகின்றனர்
அத்தோடு    இராணுவ  மயமாக்க  35 ஏக்கர்  காணியை  வழங்கிய  சட்டத்திற்கு  கண்டவளை  பிரதேச  செயலகத்துக்குட்பட்ட   குடும்பங்களுக்குள்  666  குடும்பங்கள்  நிரந்தர  காணியாறு  இருக்குறார்கள்  அவர்களுக்கு   சரி  வழங்குவதற்கு  சட்டத்திற்கு  கண்  தெரிய  வில்லையா என்ற  பல  கேள்விகளை  ஊர்மக்கள்  எழுப்பு கின்றனர் IMG_0157 copy
Facebook Comments