1,10,19,28ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீடு மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும்.வட திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்கும்.பெண்களால் ஆதாயம் இல்லை. அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.புதிய தொழில் முயற்சிகளில் சில முன்னேற்றம் காணப்படும். வெளிநாட்டு விசயங்களில் வெற்றி கிடைக்கும்.வீண் பெருமைகளுக்காக மற்றவர்களின் காரியங்களில் தலையிட வேண்டாம். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள்.தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.

ஆதிர்ஷ்;டமான எண்:-6
அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments