3,12,21,30ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.சகோதரிகளால் ஆதாயம் இல்லை. கமிசன் தொழில் செய்வோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். பூர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரியவர்களின் உதவியால் நல்ல முடிவுக்கு வரும். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் லாபம் உண்டு. செல்வ செல்வாக்கு புகழ் கூடும் காலமாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு உண்டாகும்.தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும்.செய் தொழிலில் கவனம் தேவை.காதல் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.தங்கம் வெள்ளி போன்ற நகைகள் செய்வோர்கள்,அறநிலைத்துறை சார்ந்தவர்கள் வெளி நாட்டு வர்த்தகம் செய்வோர்கள் ஆகியோர்கள் நன்மை அடைவார்கள்..

அதிர்ஷ்டமான எண்:-9
அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
சாந்தி:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments