4,13,22,31ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். காதல் விசயங்களில் கவனம் தேவை. தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களை நாடுவீர்கள். வெகு காலமாக வங்கிகள் மூலம் எதிர் பார்த்த பணம் கிடைக்க இன்னும் காலதாமதம் ஆகும்.குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. அடுத்தவர்களுக்
காக உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள் பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,
ஆலயப் பணி செய்வோர்கள்,கட்டிடப் பணியாளர்கள்,சிறு தின் பண்ட வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். எரி பொருட்கள், மின்சாரம்,ராணுவம் போன்ற துறையைச் சார்ந்தவர்களும்,வழக்கறிஞர்களும்,கம்யுட்டர் வியாபாரிகளும் ஆதாயம் அடைவார்கள்..

அதிர்ஷ்டமான எண்:-5
அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments