5,14,23 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. பேராசையை விலக்குதல் நல்லது. யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும்.பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம்.கமிசன்,தரகு தொழிற் செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள்,எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள்..இரும்பு,செங்கல் சிமிண்ட்,மணல் போன்ற கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா, நாடகத் துறை சார்ந்தவர்கள்,இசைத்துறை சார்ந்த கலைஞர்கள் நற்பலன் அடைவார்கள். உடல் நிலையில் இருந்து வந்து தொல்லைகள் தீரும்.உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.யாத்திரைகள் வெற்றியளிக்கும்.
வீட்டை திருத்தி; கட்டுவீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கணவன் மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்டமான எண்:-8
அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
சாந்தி:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

Facebook Comments