9,18,27ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குல தெய்வ வழிபாடு செய்து வரப் போட்ட திட்டங்கள் நிறை வேறும் காலமாகும். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும். விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது செய்தொழில் இடமாற்றம் ஏற்படலாம்..நண்பர்களால் ஆதாயம் இல்லை. கலைத்துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள்.திடீர் அதிர்ஷ்டம் ஆகிய ரேஸ்,லாட்டரி மூலம் தனம் கிடைக்கும்.தேவையற்ற காரியங்களில் தலையிட்டு வீண் பிரச்சனை களில் மாட்டிக் கொள்ளரீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.கண், பல் சம்பந்தமான உபாதை
கள் வந்து போகும்.யாத்திரை வெற்றி தராது.நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும்.பெண்கள் விசயத்தில் மிக எச்சரிக்கை தேவை.மனைவிக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்டமான எண்:-3
அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். தொடரும்!

Facebook Comments