இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி அடிலெய்டில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ரெய்னா, கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை எடுத்தது.

இதன் பின்னர் 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலியா 8.5வது ஓவரில் 2 விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அந்த ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீசினார். அதை ஸ்மித் அடிக்க முயன்ற போது எக்ஸ்டிரா கவரில் நின்று கொண்டிருந்த கோஹ்லி அதை அசத்தலாக பிடியெடுத்தார்.

அப்போது, காதில் மாட்டியிருந்த மைக்ரோபோன் வழியாக ஸ்டீவ் ஸ்மித் Channel-9 என்ற தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது, இந்த கவனச்சிதறலே ஆட்டமிழந்ததற்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்ந்து கோஹ்லி ஸ்மித்தை நோக்கி வெளியே போ என்று கோபமாக பேசினார், பேட்டி கொடுத்துக் கொண்டே இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலகுவாக எடுத்துக் கொண்டது தான் கோஹ்லியின் கோபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கோஹ்லியின் செயலை வரவேற்றுள்ளனர்.

Facebook Comments