வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த யுவதி ஒருவருக்கு தகாத அழுத்தங்களை கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சிப்பாய் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகத்தேகம, மீவெல்லாவ பிரதேசத்தில் வசித்து வரும் கரந்தெனிய ஆயுதப்படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி மாலை 6.30 அளவில் தான் நவகத்தேகம நகரில் இருந்து வந்து கொண்டிருந்த போது, சந்தேக நபரான இராணுவப் புலனாய்வுப் பிரிவு சிப்பாய் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக 26 வயதான யுவதி பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் இன்று ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.நவகத்தேகம பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments