இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருக்கும் வலிகாமம் வடக்கில் இன்னமும் 5,341 ஏக்கர் (5341.28) காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்பதற்கு முன்னர் வலிகாமம் வடக்கில் 7080.5 ஏக்கர் நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்தது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இரண்டு கட்டங்களாக 1,739.02 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு, பளைவீமன்காமம் வடக்கு மற்றும் தெற்கு, கட்டுவன், தென்மயிலை, வறுத்தலைவிளான், வசாவிளான், மயிலிட்டி, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கின் வளலாய் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த காணிகள் விடுவிக்கப்பட்டன.

வலளாய் பகுதியில் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட்டு, வலிகாமம் கிழக்கு பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வலிகாமம் வடக்கில் இன்னமும் விடுவிக்கப்படவேண்டிய கிராம அலுவலர் பிரிவுகளின் விபரங்கள் வருமாறு,

news-jaffna

Facebook Comments