ஜிக்கா’ எனும் வைரஸ் நோய் கொசுக்களின் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு தோன்றிய ஜிக்கா நோய், 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்வதால் ’ஜிக்கா’ பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நோயானது, சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது.

’ஏடிஸ்’ கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் உடலுறவின் மூலமாகவும் பரவுவதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாவில்லை.

பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாதிப்புடன் பிறந்துள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் ஜிக்கா வைரஸ் ஆசியா கண்டத்துக்கும் வேகமாக பரவ தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளது.

ஜிக்கா வைரஸ் கிருமிகள் மிக வீரியத்துடன் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான மார்கரெட் சான் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்த்துறை இயக்குனரான டாக்டர் மார்கோஸ் எஸ்பினல், கொசுக்கள் எங்கெல்லாம் உள்ளனவோ, அங்கெல்லாம் நோய் செல்லக்கூடும் என்றும் அது பரவும்வரை நாம் காத்திருக்க கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

Facebook Comments