கரைச்சிப்பிரதேசத்தில் மூவாயிரத்து 895 பேருக்கு மாதாந்த உதவிப்பணக் கொடுப்பனவு

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில் மூவாயிரத்து 895 பேருக்கு மாதாந்த உதவிப்பணக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப்பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தினூடாக சமுக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மூவாயிரத்து 895 பேருக்கு பொதுசன மாதாந்த உதவிக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனைவிட 124 பேருக்கு புற்றுநோய்க்கான கொடுப்பனவுகளும் 11 பேருக்கு காசநோய்க்கான கொடுப்பனவுகளும் 84 பேருக்கு சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவுகளும் இரண்டு பேருக்கு தொழுநோய்க்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு தலா 1500 ரூபா கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப்பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திரிசவிய திட்டத்தின் கீழ் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments