கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சித்த துறைமுக உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்குளி டிலாசல் மஹாபொல நிலையத்திற்கு அருகாமையில் இன்று (29) இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நாபர் 1.5 தொன் எடையைக்கொண்ட வாகனங்களை உடலின் மீது ஏற்றி சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இடையில் ஏதோ சில காரணங்களுக்காக வாகனத்தை உடலின் மீது நிறுத்த வேண்டாம் என சாதனை முயற்சியாளர் குறிப்பிட்ட போதிலும் வாகனம் உடலில் ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் சுகவீனமுற்ற குறித்த சாதனை முயற்சியாளர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Facebook Comments