கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை மிகவும் உயர்ந்தளவில் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் கடந்த ஆண்டுகளில் கிளிநொச்சியில் மது பாவனை 9.2% விகித சராசரியில் இருந்து 24.6% விகித சராசரி வரை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 19-34 வயது பிரிவினரே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் கிளிநொச்சியில் பல இடங்களில் சட்ட விரோதமான மது விற்பனையும் காணப்படுகின்றது.

போதைப்­பொ­ருட்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­களை அதில் இருந்து மீட்­டெ­டுக்க பல அரச மற்றும் அர­ச­ சார்­பற்ற நிறு­வ­னங்கள் உள்­ளன. போதைப்­பொ­ருட்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்கள் அதி­லி­ருந்து விடு­பட சிகிச்சை பெறு­வதை கட்­ட­யா­மாக்கும் சட்­ட ­மூலம் ஒன்று இலக்கம் 54/2007 ஆம் ஆண்டு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு என்ற பெயரில் இயற்­றப்­பட்­டது.

போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் இல­வ­ச­மாக இந்த நிறு­வ­னங்­களின் ஊடாக புனர்­வாழ்வு பெற­மு­டியும். இங்கு புனர்­வாழ்வு பெற விருப்­ப­மா­ன­வர்கள் 0112868794 மற்றும் 1984 என்ற இலக்­கங்­களின் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Facebook Comments