கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இரமகிறிஸ்ண வித்தியாலயத்தின் மாணவர்கள் வீதிகள் குன்றும் குழியுமாகவும் ஒழுங்கின்மையாவும் கனகபுரம் -உதயநகர் ஊடாக செல்லும் வீதி காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாம் உரிய நேரத்தில் பாடசாலைக்கு செல்ல முடியாதுள்ளதாகவும் சில சமயங்களில் பாடசாலை சீருடைகள் அழுக்கடைவதாகவும் தெரிவித்துள்ளனர். தயவு செய்து இந்த வீதியினை மிக விரைவில் பாவனைக்குகந்த விதத்தில் புனரமைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Facebook Comments