கிளிநொச்சி கரைச்சிப்பிரதேசத்தில் இருபத்தி மூவாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த எழுபத்தி ஐயாயிரத்து 910 பேர் மீள்குடியேறியுள்ளதாக கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில்  நடைபெற்ற  கரைச்சிப்பிரதேச செயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்த்தில்

கலந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின்  115 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ள நாற்பத்தி இரண்டு கிராமஅலுவலர் பிரிவுகளில் தற்போது இருபத்தி மூவாயிரத்து 278 குடும்பங்களைச்சேர்ந்த எழுபத்தி ஐயாயிரத்து 910 மீள்குடியேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்படி குடும்பங்களில் 162 முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்த 616 பேரும் 32 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த 91 பேரும் அடங்குகின்றன. என்றும்  தெரிவித்தார்

Facebook Comments