சங்குப்பிட்டி அருகாமையில்  உள்ள  கேரதீவுப்பகுதியில்   தனியார்  பேருந்து  ஒன்றும்  உழவு  இயந்திரமும் இரவு   10 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது  உழவு  இயந்திர  சாரதி சம்பவ  இடத்திலையே  பலியாகி உள்ளார்
குறித்த  விபத்து  யாழ்ப்பாணத்தில்  இருந்து  பூநகரி  நோக்கி  வந்து  கொண்டிருந்த உழவு  இயந்திரத்தை      யாழிலிருந்து  கொழும்பு  நோக்கி  சென்று கொண்டிருந்த  தனியார்  சொகுசு  பேருந்து  கேரதீவுப்பகுதியில்     முந்துவதற்கு  முற்பட்ட  வேளையே  விபத்துக்குள்ளானதாக  தெரிய  வருகிறது 
இச்சம்பவத்தில்  உயிரிழந்த  உழவுஇயந்திர  சாரதி  பூநகரி  செம்மன்குன்றைச்சேர்ந்த  ஐந்து  பிள்ளைகளின்  தந்தையான சிதம்பரப்பிள்ளை  கந்தசாமி   [வயது  49] என்று  தெரிய  வருகின்றது  இவரது  உடல்  சாவகச்சேரி  வைத்தியசாலையில்   வைக்கப்பட்டுள்ளது
குறித்த  சொகுசுப்பேருந்து   வழி  அனுமதிப்பத்திரம் இல்லாமலே  சேவையில்  ஈடுப்ப்ட்டிருப்பதாகவும்  தெரிய  வருகின்றது  குறித்த  விபத்து  தொடர்பான  விசாரணைகளை  சாவகச்சேரி  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்
Facebook Comments