கடந்த மூன்று ஆண்டுகளில், அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடற்படை, முற்றாகவே கட்டுப்படுத்தியுள்ளது என கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளர் ரியர் அட்மிரல் தர்மேந்திர வெட்டேவ குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

“போருக்குப் பின்னர், ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு கடல்சார் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்காக, கடற்படை தனது ஆற்றலையும், திறனையும்  அதிகரிக்க வேண்டியுள்ளது.

மொத்த எரிபொருள் பயன்பாட்டின் 15 வீதத்தை, கடற்படையே நுகர்வதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காலி கலந்துரையாடலில் உரையாற்றிய ரணில், கடற்படையை நீலக்கடல் கடற்படையாக (blue water Navy) மாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து தெரிவித்திருந்தார்.

நீலக்கடல் கடற்படையை உருவாக்க வேண்டுமானால் அதன் நடவடிக்கைச் செலவுகள் அதிகமாகும். அதற்காக பாதுகாப்பு ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டியிருக்கும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Facebook Comments