நாட்டுக்குள் சட்டவிரோதமாக போதைபொருள் கொண்டுவருவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் பிரிவிடம் கேட்டறிந்துள்ளார்.

இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

கடந்த வருடத்தில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப் பொருள் குறைவடைந்துள்ளதா? அல்லது உயர்வடைந்துள்ளதா? கடந்த தினத்தில் இவ்வாறு கொண்டுவரப்பட்டவை எங்கிருந்து வந்தன என்பது தொடர்பிலும் ஜனாதிபதி கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த சுங்க திணைக்கள அதிகாரிகள், இதற்காக 24 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதோடு, கொள்கலன்களை சோதனை செய்ய நவீன தொழிநுட்ப கருவிகள் தேவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments