மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் 30 அடி நீள ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அந்த திமிங்கலம் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக பிரமாண்ட திமிங்கலங்கள் இறந்து ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி அருகே குட்டி திமிங்கலங்கள் பல கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜுஹு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள இந்த 30 அடி திமிங்கலம் Bryde’s whale என்ற வகையை சேர்ந்தது என்றும் இதன் எடை சுமார் 4 டன் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அந்த திமிங்கலத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த திமிங்கலத்தை அகற்ற கிரேன்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலம் கரை ஒதுங்கியதற்கு கடலின் அடியில் ஏற்படும் ஒலி மாசு, தொழிற்சாலைகளால் ஏற்படுத்தப்படும் மாசு, ப்ளாஸ்டிக் குப்பைகள், நோய் என எதுவாக வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது மஹாராஸ்டிரா கடற்கரையில் கரை ஒதுங்கும் இரண்டாவது ராட்சத திமிங்கலம் ஆகும்.

கடந்த ஆண்டு அலிபாக் கடற்கரையில் நீல திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அதனை மீண்டும் கடலில் சேர்க்க 10 மணி நேரங்களாக போராடிய நிலையில், அது உயிரிழந்துள்ளது.30ft_whale_002 30ft_whale_003

Facebook Comments