முல்லை மாவட்ட மாந்தை கிழக்கில் கத்திக்குத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்
நேற்று (29) இரவு 10.00 மணிக்கு நட்டாங்கண்டல் புளியமரத்தடியிலுள்ள பாலப்பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மல்லாவி வைத்த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் 50 வீட்டுத்திட்டம் பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்தவரான 35 வயதுடைய சந்திரபாலன் சந்திரகுமார் எனவும் காயமடைந்தவர் நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் எனவும் அறியமுடிகிறது.

mangulam_meder1 mangulam_meder2 mangulam_meder7 mangulam_meder8

ஒன்றாக சேர்ந்து கள்ளுக்குடித்து கூட்டிக்கொண்டுவந்து குத்திக் கொலைசெய்யப்பட்டதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸாரும் கிளிநொச்சியைச் சேர்ந்த பொலிஸ்தடயவியல் ஆய்வுப்பிரிவினரும் மேற்கொண்டுவருகின்றனர்

Facebook Comments