உலக மருத்துவ சுகாதார சங்கதின் (IMHO – Canada) நிதிப்பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையால் கிளிநொச்சி , துணுக்காய் கல்வி வலயத்தை சேர்ந்த
தரம்- 1 மாணவர்களுக்கான பற்சுகாதார மேம்பாட்டு செயற்றிட்டம் 2013 இல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2016ம் ஆண்டில் இச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (2016.01.30) கல்வி வளர்ச்சி அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல் வைத்தியர்களும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் உறுப்பினர்களும் உத்தியோகத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வருடம் முல்லைத்தீவு வலயத்திற்கும்,முன்பள்ளிகளுக்கும் இச் செயற்றிட்டம் விரிவு படுத்தப்படவுள்ளது, இச் செயற்றிட்டத்தின் மூலம் 6000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.1929964_789901561156604_3623250505888192555_n-768x576 12651034_789907271156033_3655028694573181612_n-768x576 12651330_789907144489379_4631619951633704531_n-768x576

Facebook Comments