7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்!!
‎சார்ஜாவின்‬ 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன் 2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments