முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோஷித்த ராஜபக்ஸவிடம் இன்று முற்பகல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர்  வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, யோஷித்தவுடன் CSN அலைவரிசையின் பிரதம அதிகாரி ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க, JTF பெர்னாண்டோ, கவிஷால் திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க, JTF பெர்னாண்டோ, கவிஷால் திசாநாயக்க ஆகியோரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments