பெப்ரவரி 5ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன், வடக்கு நோக்கி விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது அவர் வடக்கில் இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களை பார்வையிட்டு, போரினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

இந்த நிலையில் செய்ட் அல் ஹூசைன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பதாகவும், அன்றைய தினம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின்போது ஐக்கிய நாடுகள் பரிந்துரை தொடர்பிலான நடைமுறைப்படுத்தல்களை அரசாங்கம் அவருக்கு தெளிவுபடுத்தவுள்ளது.

Facebook Comments