கிளிநொச்சியின் பால் உற்பத்தியில் 35 வீதமே மாவட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்
IMG_0709 IMG_0711 IMG_0712 IMG_0716 IMG_0724 IMG_0725 IMG_0754 IMG_0756
இன்று திங்கள் கிழமை கிளிநொச்சியில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் வேல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரனையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை றிலையத்தினை திறந்து வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
4.6 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி விற்பனை நிலையமானது மாவட்ட மக்களின் நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்வதனை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர்
குpளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் பின்நோக்கிய நிலையில் காணப்படுகிறது அதற்கு முக்கிய காணிகளில் ஒன்றாக மாவட்ட உற்பத்திகளில் பெரும்பாலானவை வெளியில் விற்பனையாகின்றமையே எனவேதான் மாவட்டச் செயலகம் தற்போது ஒரு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது ஆதாவது கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்கின்ற பெரிய நிறுவனங்களை கட்டுப்படுத்துவது என்று.
இந்த தீர்மானத்திற்கு பின்பு அவ்வாறு பால் கொள்வனவில் ஈடுப்படுகின்ற பெரியளவிலான நிறுவனங்கள் மாவட்டச்செயலகத்தோடு தொடர்புகொண்டார்கள் அவர்களுக்கு நாம் மாவட்டத்தின் போசாக்கு நிலைமையினை கருத்தில் கொண்டே இவ்வாறு தீர்மானம் மேற்மேற்கொண்டோம் என்பதனை தெரிவித்திருந்தோம் அதற்கு பின் அவர்கள் மொத்த பால் உற்பத்தியில் மாவட்ட மக்களின் நுகர்வுக்கு தேவைக்கு மேலதிகமான உற்பத்தியை கொள்வனவு செய்வதாக உறுதியளித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய பால் உற்பத்தி 10 ஆயிரம் லீற்றராக காணப்படுவது போதுமானது அல்ல இங்குள்ள கால் நடைகளின் அளவுக்கேற்ப அது மேலும் அதிகரித்த தொகையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன்,வேல்ட் விசன் நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் ஜொனாதன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Facebook Comments