முருகன் விடுதலைக்கு பத்து இலட்சம் கையெழுத்து பெறுவதற்காகவேனும் உதவுங்கள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு சிறையில் இருக்கும் மகன் முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கா இலங்கையில் பத்து இலட்சம் கையெழுத்து பெறுவதற்கு இருக்கின்றேன். அதற்காக எனக்கு உதவி செய்யுங்கள் என முருகனின் தாயார் வெற்றிவேல் சோமணி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் வாதிகள்  அமைப்புகள் பொது மக்கள்ஆகியோரிடமே அவா் இ்நதக் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளாா்
இன்று  கிளிநொச்சி பளையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். . அவர் மேலும் தெரிவிக்கையில்
எனது மகன் முருகன் உள்ளிட்டவர்களின் விடுதலைக்காக இலங்கையில் பாரியளவிலான வெகுஜன போராட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை  தமிழ் அரசியல் தரப்புகள் மத்தியிலும் ;அதற்கான முன்னெடுப்புகள் எவையும மேற்கொள்ளப்படவில்லை கடந்த 25 வருடங்களாக முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் சிறையில் வாழ்கின்றனர். இவர்களின் விடுதலைக்காக இனியாவது இலங்கையில் தமிழ் மக்கள் குரல்கொடுக்க முன்வரவேண்டும் முக்கியமாக இதுவரைக்கும் எதுவும் செய்யாத தமிழ் அரசியல் தரப்புகள் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் எனத்  தெரிவித்த முருகனின் தாயார் சோமணி அவர்கள்
இந்தியாவில் தமிழகத்தில்  இந்த ஏழு பேரின் விடுதலைக்கும்  அவர்களுக்கு மரண தண்டனை திகதி குறிக்கப்பட்ட போதும்  எழுந்த எழுச்சி போராட்டங்கள் போன்று இலங்கையில் எதுவும் இடம்பெறவில்லை என்பது எனக்கு மிகவும் கவலையும் வருத்தமும் அளிக்கிறது  தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள்  ஊர்வலங்கள்  கதவடைப்புகள் என போராட்டங்கள் பெரியளவில் இடம்பெற்றது. ஆனால் இங்கு அவ்வாறு இடம்பெறாமை எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
தற்போது கூட பேரூந்துகளில் தனியாக மகனின் விடுதலைக்காக கையெழுத்து கேட்டுபோனால் நூற்றுக்கு 95 வீதமானவர்கள் போடுகின்றார்கள் ஏனையவர்கள்  மறுப்பதோடு மனதை காயப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். எனக் கவலையோடு தெரிவித்த அவர்
இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டால் அங்கு தமிழகத்தில் உள்ள மீனவர்கள் எல்லாம் தொழிலுக்குச் செல்லாமல் ஒன்று திரண்டு போராடுகின்றார்கள் ஆனால் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டால் இலங்கையில் இவ்வாறு மீனவர்கள் ஒன்று திரண்டு போராடுவார்களா? இல்லையே அது ஏன்? என ஆதங்கத்துடன் கேள்வியெழுப்பிய அவர்
பிள்ளை பெற்றோரின் முகத்தை பார்க்க முடியாது நாளாந்தம் ஒரு மூலை யில் ஏங்கிக்கொண்டிருக்க  பெற்றோர்கள் ஒரு புறம் விரக்த்தியால் எல்லாவற்றையும் துறந்தவர்கள் போன்று சிறையில் வாடிக்கொண்டிருக்க இடையில் இதையெல்லாம் பார்த்து நாளும் நான் செத்துக்கொண்டிருக்கிறன். எனவே கொலையாளிகளுக்கே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்கின்ற அரசு கொலையாளிகளுக்கு உதவிய குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் இவர்களுக்கு ஏன் பொது மன்னிப்பு வழங்க கூடாது? எனவும் கேள்வி எழுப்பினார்IMG_0790 IMG_0793 IMG_0802
Facebook Comments