கண்டவளை பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞன் பலி
கண்டவளை பகுதியில் இன்று இரவு 8 மணி யளவில் கிணற்றில் விழுந்து இளைஞன் ஒருவர் பலியாகி உள்ளார்
குறித்த இளைஞன் கிணற்றடிக்கு சென்றிருந்ததாகவும் அவர் நீண்ட நேரமாக காணாமையினால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடிய போது கிணற்றினுள் இருந்து மீட்டு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்

இருப்பினும் கிணற்றில் இருந்து மீட்கும் போதே அவர் இறந்த நிலையிலையே மீட்கப்பட்டதாக தெரிய வருகிறது

பலியான இளைஞன் வெளி க்கண்டல் கண்டாவளையை சேர்ந்த 26 வயதான சின்னத்துரை கோகுலன் எனவும் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Facebook Comments