கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு நிர்வாக உத்தியோகத்தர் கடந்த 28ஆம் திகதி முதல்; நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்தார். அண்மையில் கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு விஜயம்செய்து மருத்துவமனையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் இ.சம்பந்தன் கேட்டறிந்து கொண்டார். வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக இணைத்தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வியெழுப்பினார். இதன்போது 28ஆம் திகதி தொடக்கம் நிர்வாக உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. –

Facebook Comments