கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் காலவரையறையற்ற பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் தங்களது அலுவலகத்தினை மூடியதோடு 31 கிளைகள் மற்றும் இரண்டு உற்பத்தி ஆலைகள் என்பவற்றையும் மூடி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கூட்டுறவுச் சங்கங்களோடு ஒப்பிடுகையில் வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் முதன்மை நிறுவனமாக இயங்கிய சங்கத்தில் மீளகுடியேற்றத்தின் பின்னர் சங்கம் மிக வேகமாக வளர்ந்து வந்ததோடு, வட மாகாணத்தில் சிறந்த பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமாகவும் தமது சங்கம் திகழ்ந்துகொண்டிருக்கிறது.

எனவே இந்தச் சங்கத்தில் ஊழல் மோசடி எனத் தெரிவித்து உள்ளக கணக்காய்வு இடம்பெற்றது. ஆனால் அந்தக் கணக்காய்வு அறிக்கையின் படி எந்தவிதமான ஊழல் மோசடிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் பின்னர் தற்போது 46/1 விதியின் கீழ் தங்களது அனைத்து கிளைகளிலும் பகிரங்கமாக பொது மக்களிடம் சங்கத்தின் ஊழல் மோசடி தெரிந்திருப்பின் முறையிடலாம் என அறிவித்தல் ஒட்டப்பட்டு தற்போது இரண்டாவது தடவையாக உள்ளக கணக்காய்வு இடம்பெற்று வருகிறது.

இது வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக எமது சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சங்கத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும் எனவும் தெரிவிக்கும் ஊழியர்கள் கடந்த மாகாண சபை அமர்வின் போது மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் கூட்டுறவுச் சங்கம் மது வரித் திணைக்களத்திற்கு இலஞ்சம் வழங்கி வருகிறது என பேசியிருந்தார் இது சங்கத்தின் நன்மதிப்பை பாதிக்கும் கருத்தும் எனவும் தெரிவிக்கும் ஊழியர்கள்.

தற்போது எமது சங்கத்தின் பொதுச் சபையை தலைவர் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த போது மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இரண்டு தடவைகளும் தடுத்து நிறுத்தியமையினால் தலைவர் சங்கத்திற்கு சமூகமளிப்பதனை தவிர்த்துகொண்டார் எனவும் இதனால் தற்போது பொது முகாமையாளரும் வருகை தருவதில்லை எனவும் எனவேதான் தமது சங்கத்தின் மீது அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப் படுகின்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்வதோடு, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

IMG_0888 IMG_0889 IMG_0894 IMG_0901 IMG_0912

Facebook Comments