கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை காலபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டு, நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக மாவட்டச் செயலகத்தில் இருக்கும் நிதியும் பயன்படுத்தப்படவுள்ளது.

Facebook Comments