இன்று  நாடுபூராகவும்  சுதந்திரதினம்  கொண்டாடப்பட்டு  கொண்டுள்ள  வேளை கிளிநொச்சியில்  சுதந்திரதின  பகிஸ்கரிப்பு  போராட்டம்  ஒன்று  கிளிநொச்சி  காணாமல்  போனவர்களின்  உறவினர்களின்  ஏற்பாட்டில்  நடைபெற்றது
இன்று  காலை  கிளிநொச்சி  கந்தசாமி  கோவில்  முன்றலில்  அமைதியான  முறையில்  ஆரம்பிக்கப்பட்ட  இவ்  போராட்டம்  கறுப்பு  படிகளை  தமது  தலைகளில்  அணிந்து  சுதந்திர  தினத்தில்  தமது  துக்கத்தை  வெளிப்படித்தி  இருந்தனர்
அத்தோடு  போராட்டத்தில்  கலந்து  கொண்ட  உறவினர்கள்  எமது  உறவுகள்  எங்கே ??? , கடத்தப்பட்டவர்கள்  எங்கே ??, கைது செய்யப்பட்டவர்கள்  எங்கே  ???  நாம்  இறக்க  முன்னராவது  பிள்ளைகளை  தாருங்கள்  , எமது  உறவுகள்  இறந்த  செய்தி  சொல்லவா  யாழ்  பொங்கல்  விழாவிற்கு  வந்தீர்கள்  என்ற  பல வாசகங்களை  தாங்கிய  வாறு  பகிஸ்கரிப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்
இவ்  பகிஸ்கரிப்பு  போராட்டத்திற்கு  பாராளுமன்ற  உறுப்பினர்  சிறிதரன்  கிளிநொச்சி  காணமல் போனவர்களின்  உறவினர்கள்   தமிழ் தேசிய  கூட்டமைப்பின் கொள்கை  பரப்பு  செயலாளர்  வேளமாளிதன் மற்றும்  உறுப்பினர்கள்  மக்கள்  என  பலரும்  கலந்து  கொண்டிருந்தனர் vlcsnap-2016-02-04-12h27m47s200 vlcsnap-2016-02-04-12h28m22s76 vlcsnap-2016-02-04-12h28m45s37 vlcsnap-2016-02-04-12h29m07s239 vlcsnap-2016-02-04-12h29m28s206
Facebook Comments