நல்லாட்சி  அரசாங்கத்தால்  மக்களின்  கண்ணீருக்கு  பதிலளிக்க  முடியவில்லை  என பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன்  தெரிவித்தார்
இன்றைய தினம்  கிளிநொச்சியில்  காணாமல்  போனவர்களின்  உறவினர்கள்  நடத்திய பகிஸ்கரிப்பு  அமைதிப்  போராட்டத்தில்  கலந்து  கொண்டு  ஊடகங்களிற்கு  கருத்து  தெரிவிக்கும்  போதே  அவர்  அவ்வாறு  தெரிவித்தார்  அவர்  மேலும்  தெரிவிக்கையில்
இலங்கையினுடைய  சுதந்திர  தினத்தன்று  தங்களது  சுதந்திரங்களையும்  தங்களது  பிள்ளைகளையும்  இழந்த தாய்மார்கள்  கணவன்மாரை  ஒப்படைத்த  மனைவிமார்கள் தங்களது  நிலையை  ஒரு  அடையாளமாக  அரசாங்கத்திற்கு  காட்டுவதற்கு  இறங்கியுள்ளார்கள்  கடந்த ஒருவருட  காலமாக  இவ்  மக்களின்  கண்ணீருக்கும்  துயரத்திற்கும்  இவ்  நல்லாட்சி  அரசாங்கத்தால் பதிலளிக்க  முடியவில்லை  கடந்த 7 வருடங்களாக  தமது பிள்ளைகளை  கோரி  தமிழ் மக்கள் நடத்துகின்ற  போராட்டங்களுக்கும்  செவி சாய்ப்பதாய் இல்லை  இன்றைய  சுதந்திர  தினத்தை  ஒரு கறுப்பு  நாளாக அல்லது  தமக்கு  சுதந்திரமற்ற  நாளாக  கொண்டாடுவதில்  எவ்வித  பிழையும் இல்லை என  எமக்கு  தொன்று கிறது  எனவும்  இலங்கை என்கிற  நாடு  கண்ணீர்  விட்டு  அழுத  மக்களுக்கு  உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு  பதில்  சொல்லவேண்டும் எனவும்  இவ் மக்களுக்கு  எமது  ஆதாரவை  வழங்கி  உள்ளோம்  எனவும்  தெரிவித்தார்
Facebook Comments