கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க ஊழியர்களால் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பால் 5 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனக்கோரி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் இணைந்து நேற்றய தினம்  (05) கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்ட பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தில் மோசடிகள், முறைகேடுகள் இடம்பெற்றதாக வடமாகாண சபைய உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்த கருத்துக்கு, எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் 3ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். முன்னறிவித்தல் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்த பணிப்பகிஷ்கரிப்பால், மாவட்ட பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தில் இருந்த பெருமளவான கள் பழுதடைந்துள்ளதாகவும் இதனால் பெருமளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளிநொச்சி மாவட்ட பனை, தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், பொதுக் கூட்டத்தை நடத்தவேண்டும் எனவும் அங்கத்தவர்கள் இதன்போது கோரினர். அவர்களைச் சந்தித்த கூட்டுறவு உதவி ஆணையாளர் கு.ரவீந்திரன், இது தொடர்பில் அமைச்சின் ஊடாகவே முடிவு எடுக்க முடியும். அமைச்சுடன் பேசி முடிவைக் கூறுவதாக கூறினார்.

SONY DSC
SONY DSC
SONY DSC
SONY DSC
Facebook Comments