கிளிநொச்சியில்  புதிய  அரசியல் யாப்பிற்கான கருத்துகணிப்பு நாளையும்  நாளை மறுதினமும் நடைபெறும்  அனைவரும்  கலந்து  கொள்ளுங்கள்  என  இன்றைய  தினம் பிரமந்தனாறு பிரதேசத்தில் அகரம்  நூல்  நிலைய திறப்பு  விழாவில்  பிரதம  விருந்தினராக  கலந்துகொண்டு உரையாற்றும் பொது  பாராளுமன்ற  உறுப்பினர்  சிறிதரன்  தெரிவித்தார்
அவர்  மேலும் தெரிவிக்கையில்மூன்று அம்சங்களை  கொண்ட  புதிய  அரசியல் யாப்பில்   உள்ள  இனப்பிரச்சனைக்கான  தீர்வு  என்பதற்கான  கருத்துக்கணிப்பே  நடை பெற  இருப்பதாகவும்  சிங்கள  மக்கள்  அனைவரும்  ஒருதிரண்டு  சென்று பங்கெடுக்கின்றனர்  அதேபோல்  நாமும்  சென்று  எமது கருத்துக்களை  பதிவு செய்ய  வேண்டும்  எனவும்  எமது கருத்துக்களை  எவ்வித  பயமுமின்றி  பங்குகொண்டு  பதிவு செய்ய  வேண்டும் எனவும்  வாக்களித்து  வெற்றி  பெற வைத்ததுடன் உங்களுடைய  பங்கு  முடிந்து  விடவில்லை  இவ்  கருத்துக்கணிப்பிலும்  அனைவரும்  பங்குகொள்ள  வேண்டும்  என  கேட்டுக்கொண்டார்
இன்று  2.30 மணியளவில் ஆரம்பமான இவ்  அகரம்  நூல்  நிலைய  திறப்பு  விழாவில்  பாராளுமன்ற  உறுப்பினர்  சிறிதரன்  கிராமசேவையாளர்  சேகர்  ஓய்வுபெற்ற  முன்னாள்  பிரமந்தனாறு  மகாவித்தியாலய  அதிபர்  சிவலிங்கம்  தற்போதைய  அதிபர்  அன்ரன்  மரியதாஸ்  சமுர்த்தி  உத்தியோகத்தர் ,அபிவிருத்தி  உத்தியோகத்தர் மற்றும்  பொது  அமைப்புக்கள்  சார்பாக  ஜீவன் ,சேதுராசா, மாணவர்கள் ,மக்கள்  என  பலரும்  கலந்து  கொண்டனர்
இன்  நிகழ்வில்  பிரமந்தனாறு  மகாவித்தியாலயத்தில்  தரம்  ஐந்து புலமை  பரிட்சையில்  சித்தியடைந்த  ஆறு  மாணவர்களிற்கு துவிச்சக்கர  வண்டிகளும்  75 புள்ளிகளுக்கு  மேல் பெற்ற  28 மாணவர்களிற்கான  பரிசில்களும்  வழங்கப்பட்டதுடன் நிர்வாக  கிராம உத்தியோகத்தர்  பதவிக்கு  பதவி  உயர்வு  பெற்று செல்லும்  பிரமந்தனாறு  கிராம  சேவையாளர்  சேகர்  அவர்கட்கு  நினைவு  பரிசிலும்  வழங்கி  வைக்கப்பட்டது _MG_1534 IMG_1422 IMG_1450 IMG_1463 IMG_1483 IMG_1490 IMG_1495
Facebook Comments