கிளிநொச்சி கிராஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 11-02-2016 வியாழன் மாலை 2.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.சு.தர்மரட்ணம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக அயற் பாடசாலையின் அதிபர்கள் ஆகியோரும் பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பாடசாலையின் அதிபர் திரு.ச.ஆனந்தநடராஜன் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டெனிஸ்வரன் தனது உரையில், மாணவர்கள் எப்போதும் ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத வெறும் கல்வி பயனற்றது, எனவே மாணவர்கள் வாழ்விலே எந்த நிலைக்கு உயர்ந்தாலும் கற்ப்பித்த ஆசிரியர்களை மறந்துவிடக்கூடாது என்றும், அவர்களது அற்பணிப்பே ஒவ்வொரு மானவனதும் வெற்றிக்கு வித்தாகின்றது என்றும் தெரிவித்தார். அத்தோடு கடந்த ஆண்டு அந்தப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் தாம் வாக்களித்துச்   சென்றதை மறக்கவில்லை என்றும் அதன் அடிப்படையில் இங்கு வருகின்ற பிரதான வீதி பல்லவராயன் கட்டு சந்தியில் இருந்து நாச்சிக்குடா வேரவில் வரையான வீதியை புனரமைத்து தருமாறு நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக கடந்த ஆண்டு 4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் தற்போது வேரவில் வைத்தியசாலை பகுதியில் இருந்து வீதி புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது அதேவேளை இந்த ஆண்டு நிதியில் 8 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கித் தருவதாகவும் அதனூடாக வீதியின் ஒரு பகுதியை தரமான முறையிலே புனரமைத்துக்கொள்ள முடியும் என்றும், அத்தோடு இந்த பாடசாலையின் பௌதீக வளத் தேவைகளை ஓரளவு நிவர்த்தி செய்ய தனது நிதியில் (CBG) இருந்து ரூபா 100,000-00 ஒதுக்கித்தருவதாகவும், அத்தோடு வருகின்ற மாதத்தில் இருந்து இங்கு போக்குவரத்து சேவைகள் ஒழுங்கான முறையில் புதிய நேர அட்டவணையின் அடிப்படையில் இடம்பெறும். எனவே ஆசிரியர்கள் மற்றும் கிராமத்து மக்களுக்கு போக்குவரத்தும் சிறப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்IMG_0730 IMG_0670 IMG_0709 - Copy
Facebook Comments