கிளிநொச்சி விஸ்வமடுப்பகுதியில் இன்று பிற்பகல் 7.30 மணியளவில் பாரிய தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தொடராக அமைக்கப்பட்டிருந்த மூன்று கடத்தொகுதிகளில் ஒருகடையில் மின் ஒழுக்கின் காரணமாக தீ உருவாகி கடையின் முழுப்பாகத்துக்கும் வேகமாகப்பரவி மற்றய இரு கடைகளுக்கும் பரவியுள்ளது.

இவ்விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டதுடன் ஒருகடையானது பகுதியளவில் சேதமடைந்துள்ளது. கடைகள் தீப்பற்றுவதை உணர்ந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக தீயை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயன்றும் அது பயனளிக்கவில்லை.
பின்பு கடைகள் முற்றாக எரியும் நிலை அடயும் நேரத்தில் பொலிஸாரின் தண்ணீர் வண்டி உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
இந்த சேதம் நடைபெற்றதற்க்கு பிரதான காரணமாக தீப்பற்றியவுடன் தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமையினால் ஏற்ப்பட்டது என பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.தங்கள் பிரதேசத்தில் தீயணைப்பு வாகனங்கள் இல்லாமையினாலும் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறூவங்கள் இல்லாமையினாலுமே தாம் இவ்வாறான இழப்புக்களை சந்திப்பதாக மேலும் தெரிவித்தனர்.IMG_2144 IMG_2146

Facebook Comments