முல்லை மாவட்ட விஸ்வமடு, ரெட்பாணா பகுதியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அதிரடி தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து குறித்த பகுதிக்குச் சென்றுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இன்று காலை 8 மணியளவில் தென்னந்தோப்பில் இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்களையோ, பொலிஸாரையோ அனுமதிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments