விஸ்வமடு பண்ணிரண்டாங்கட்டை  பகுதியில் மோட்டர்  வாகனமும்  மகேந்திரா[கப்]  வாகனமும்  விபத்துக்குள்ளானதில்  சம்பவ  இடத்தில்  பெண்ணொருவர்  பலியாகியதுடன்  ஒருவர்   படுகாயமடைந்த  நிலையில்  தர்மபுரம்  வைத்திய சாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவம்  தொடர்பில்  தெரிய  வருவதாவது பலியானவர் 25 வயதான  சிவில்பாதுகாப்பு  பிரிவு  முன்பள்ளி  ஆசிரியர்  சிவபாலன்  கஸ்தூரி  எனவும்
இன்று  சிவில்பாதுகாப்பு  தலைமையகத்தில்  இடம் பெற்ற  முன்பள்ளி  ஆசிரியரியர்களுக்கான  கலந்துரையாடலை  முடித்துக்கொண்டு  கிளிநொச்சி  சென்றுகொண்டிருந்த  வேளை  12 கட்டை  பகுதியில்  வைத்து  வெள்ளை நிற  மகேந்திர  [கப்] ஒன்றுடன் விபத்துக்குள்ளானதாகவும்  விபத்துக்குள்ளான  மகேந்திரா  வாகனம்  தப்பி சென்றுள்ளதாகவும்  தெரிய  வருகின்றது
குறித்த  விபத்து  தொடர்பான  மேலதிக  விசாரணைகளை  புதுக்குடியிருப்பு  போலீசார்  மேற்கொண்டு  வருவதாக  அங்கிருந்து  கிடைக்கும்  செய்திகள் தெரிவிக்கின்றன vlcsnap-2015-04-06-12h07m09s159-e1428302964583
Facebook Comments