கிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லத்தின் சமையலாளர்கள் தங்கியுள்ள  அறையில் திடீர்  தீ
கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள மகாதேவா சைவ சிறார் இல்லத்தின் சமையலாளர்கள் தங்களது படுகையறையில் உறங்கிக்கொண்டிருந்து போது இன்று   அதிகாலை ஒரு மணியளவில் தீப்பிடித்துள்ளது . இதன்போது உறக்கத்தில் இருந்து இரு சமையலாளர்களும்  அதிஸ்டவசமாக எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும்
 . தீ சுவாலை வி;ட்டு எரிவதனை அவதானித்த சமையலாளர் ஒருவர் மற்றவரையும் எழுப்பி;க்கொண்டு  பாதுகாப்பாக வாசல் ஊடாக வெளியேறிஏறியதாகவும் தெரிவிக்கின்றனர்
. இதன் போது கட்டில் மற்றும் நுளம்பு வலை என்பன பகுதியாக  எரிந்துள்ளது.
உடனடியாக சமையலாளர்களால் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னர் குருகுலம் சிறுவர் இல்லம் எனவும் தற்போது மகா தேவா சைவ சிறார் இல்லம் எனவும் இயங்கி வருகின்ற குறித்த சிறுவர் இலத்தின்
ஆளுநர்  சபையுடன்  தொடர்பு கொண்டு கேட்ட போது
அவ்வாறு ஒரு சம்பவம் நடைப்பெற்றுள்ளது எனவும்  அது  சிறிய  ஒரு  தீ  பரவல்  என்றும் இது வேறுயாரும் இவர்களுக்கு  செய்துள்ளார்களா அல்லது தற்கொலை  முயற்சியா  அல்லது  சிறப்பாக  இயங்கி  வரும் இச் சிறார் இல்லத்தினை பழிவாங்கவோ  அல்லது திசைதிருப்பவோ  வேறுயாராலும்  செய்யப்பட்டதா     என்பது தெரியவில்லை என்றும்,
தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துகொண்டிருப்பதாகவும்  அவர்களின்  விசாரணைகள்  முடிவடைய  முன்  நாம் எதனையும்  குறிப்பிட  முடியாது  எனவும் தெரிவித்தார்.IMG_2221 IMG_2219
Facebook Comments