கிளிநொச்சியில் கால்நடை தீவன அபிவிருத்தி பயிற்சி.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவன அபிவிருத்தி பயிற்சி நெறியும், புல் வெட்டும் இயந்திரமும் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்ட கால்நடை உற்பத்தி, சுகாதார உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்கள் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கால்நடை தீவனம் தயாரிப்பதற்கான புல் வெட்டும் இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது கால்நடை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வசீகரன் கிளிநொச்சி கால்நடை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கௌரிதிலகன், நீர்ப்பாசனத் திணைக்கள் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.IMG_0177 copy IMG_0187 copy IMG_0188 copy IMG_0197 copy

Facebook Comments