வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முருங்கன் பேரூந்து நிலையம் இன்று மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு…
மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முருங்கன் நகரில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், வினைத்திறனானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் நோக்கோடு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்திற்க்கமைவாக குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் ரூபா 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முருங்கன் பிரதான பேரூந்து நிலையத்தை, வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய கலாநிதி ஜோசெப் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களால் 18-02-2016 வியாழன் காலை 10.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது…
நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், முருங்கன் பங்குத்தந்தை, மெதடிஸ்த திருச்சபையின் போதகர், இந்து மதக் குருக்கள் ஆகிய மதத் தலைவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் வணிக கைத்தொழில் அமைச்சர் அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற குளுக்களின் பிரதித் தலைவர் அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களும், நானாட்டான் பிரதேச செயலாள12694741_10208516516099546_5981603766635672121_o copy 12743598_10208516507099321_4405205138726631562_n copy 12744210_10208516509419379_3200569201116072775_n copyர் திரு.என்.பரமதாசன் ஆகியோரும், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வினை அமைச்சின் செயலாளர் திரு எஸ்.சத்தியசீலன் அவர்கள் தலைமைதாங்கினார். ​
Facebook Comments