அரச மற்றும் தனியார் பேருந்துகளின் வேகத்தினை கட்டுப்படுத்துமாறு பயணிகள் தெரிவித்துள்ளனர். இருவருக்கிடையிலும் ஏற்படும் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பேருந்தில் ஏற முன்பும் இறங்க முன்பும் அவசரமாக புறப்படுவதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். அத்துடன் பயணிகளிற்கான சிறிய அளவிலான மிகுதிப்பணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-வவுனியா இடையே நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

Facebook Comments