கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த சனிக் கிழமை காலையில் பாடசாலையில் மேலதிக கணித வகுப்பிற்காக வருகை தந்த மாணவியை வகுப்பு நிறைவுற்றதும் ஆசிரியர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாணவி வகுப்பிலிருந்து வெளியில் ஒடி வந்து வீடு சென்றுள்ளார்.
இதனையடுத்து கடந்த திங்கள்  கிழமை பாடசாலைக்கு சென்று மாணவியின் பெற்றோர் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்
. சம்பவத்தை விசாரித்த அதிபர் தான் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தெரிவிப்பதாக கூறியதோடு தரம் 10 சியில் கல்வி கற்ற மாணவியை தரம் 10 ஏ மாற்றியுள்ளதோடு கடந்த புதன் கிழமை பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.
புதன் கிழமை பாடசாலைக்குச் சென்ற மாணவியுடன் சக மாணவிகள் எவரும் பேசாது இருந்தது மட்டுமன்றி குறித்த மாணவியே தவறு செய்துள்ளதாகவும் பேசிக்கொண்டதன் விளைவாக அவமானம் அடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் இன்று வெள்ளிக்கிழமை மாணவியின் உறவினர்கள்  பாடசாலையின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர்  பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடி குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்வதோடுஇ ஆசிரியர் கைது செய்யப்படவேண்டும் எனவும் ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்
மாணவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ய முன்னர் சம்பவம் தொடர்பில் கடிதம் எழுதி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் வலயக் கல்விப்  பணிப்பாளர்இ மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவுஇ என்பவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பெற்றோரால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுIMG_0205 copy IMG_0208 copy IMG_0211 copy IMG_0213 copy IMG_0216 copy IMG_0219 copy
Facebook Comments