வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வந்த பாடசாலை மாணவி 16.02.2016 மதியம் 02.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதும் இம் மரணத்தில் பலத்த சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டமையால்  (18.02.2016) நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஜே.சி.சமரவீர இனால் சிறுமியின் சடலம் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.

இப்பிரேத பரிசோதனையின் முடிவில் திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிஸோர் அவர்களால் குறித்த சிறுமியின் மரணம் கொலை என்று மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments