தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களின் “நீங்கள் அறிந்ததும்அறியாததும்” நூல் 20.02.2016 அன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது, ஆனந்சங்கரி அவர்கள் நிழல்படுத்திய குறித்த புத்தகத்தில் அவரது அரசியல் அனுபவத்தினை கொண்டு குறித்த நூல் நிழல்படுத்துப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டில் தமிழருவி த.சிவகுமாரன் சிறப்புரை நிகழ்த்தவுள்ளதுடன், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் கிளிநொச்சி கிளை அழைப்பு விடுத்துள்ளது.

Facebook Comments