1983 தொடக்கம் 2010 வரையான யுத்த பாதிப்புக்களுக்கான பொது மக்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு  இன்னும் 3000 மில்லியன் ரூபாக்கள் தேவையாக உள்ளது  என புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்எம் பதூர்தீன் அவர்கள் கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார்.
_MG_2250 copy _MG_2254 copy _MG_2256 copy _MG_2257 copy _MG_2259 copy _MG_2260 copy
இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்த பாதிப்பு நட்டஈட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் முழுமையாக விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை குறைநிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தப் பாதிப்புகளுக்காக புனர்வாழ்வு அதிகார சபையிடம் விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கெனவே நட்டஈடு கொடுப்பனவு வழங்கியவர்களை தவிர ஏனையவர்களுக்கு வழங்குவதற்கு இன்னும் 3000 மில்லியன் ரூபாக்கள தேவையாக உள்ளது. ஆனால் கடந்த வருடம் அரசின் நிதி ஒதுக்கீடு 550 மில்லியன் மாத்திரமே. எனவே வேறு நிதி மூலங்களையும் வெளிநாட்டு நிதி உதவிகளையும் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
புனர்வாழ்வு அதிகார சபைக்கு யுத்த பாதிப்பின் கீழ்  பொது மக்களுக்கான பாதிப்பு, அரச ஊழியர்களுக்கான பாதிப்பு, மரணமடைந்தவர்கள், காயப்பட்டவர்கள், ஆலயங்களுக்கான பாதிப்பு,முன்னாள் போராளிகளுக்கான கடன் போன்றவற்றுக்கு நட்டஈட்டுக்  கொடுப்பனவு வழங்கபட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து  தங்களுக்கு  15000 வரையான விண்ணப்ப படிவங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 4000 வரையான விண்ணப்பதாரிகளுக்கு நட்டஈடு வழங்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவா,; ஏனையவர்களுக்கு தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் படிப்படியாக ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவையில் சபையின் நிறைவேற்று பணிப்பாளர் என்.குகேந்திரன்,  பிரதிப் பணிப்பாளர் வி. உசைன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Facebook Comments