யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை முள்ளியான் ஜே-433 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள 55 பிரிவு படை முகாமிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள்  பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில் அனுமதிக்கப்படாத  இடத்தில் பாதுகாப்பற்ற வகையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால்  துர்நாற்றம்  மற்றும்  சுகாதார  சீர்கேடு  ஏற்படுவதாக  அக் கிராம  மக்கள்  தெரிவிக்கின்றனர்
 அத்தோடு கழிவுகள் கொட்டப்பட்ட பின்னர் அதன் நச்சு  மருந்து வகை  ஊற்றப்படுவதாகவும் அதனால்கொட்டப்படும் கழிவுகளை உண்ட பல மாடுகள் இறந்துள்ளது. இதனால் பிரதேச மக்கள்  அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்
இக் கழிவுகளை பிரதேசத்தில் மக்களால் வளர்க்கப்படுகின்ற திறந்தவெளி மேச்சலுக்கு செல்கின்ற மாடுகள் உணவாக உட்கொண்டுள்ளன. இதனை தொடர்ந்து உட்கொண்ட மாடுகளில் 11 மாடுகள் இறந்துள்ளதோடு மேலும் சில மாடுகள் உயிருக்காக பேராடிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் மக்களின் பிரதான வாழ்வாதாரங்களில் மாடு வளர்ப்பும் ஒன்று. இந்த பிரதேசத்தில் பெருமளவு மாடுகள் திறந்த வெளி மேச்சல் மூலமே மக்களால் வளர்க்கப்பட்டு வருகிறது. இ;வ்வாறு திறந்த வெளி மேச்சலுக்கு செல்கின்ற மாடுகளே 55 ஆவது படை பிரிவு முகாமிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்ற கழிவுகளை உட்கொண்டு இறந்துள்ளன.
அத்தோடு இக்கழிவுகளை உட்கொள்கின்ற நாய், காகம் உள்ளிட்ட ஏனைய விலங்குகளும் இறப்பதாக  பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி ஆங்காங்கே இறந்து கிடக்கின்ற மாடுகளை உணவாக உட்கொள்கின்ற நாய்கள்  கூட ஒரு சில நாட்களில் மயிர்கள் உதிர்ந்து குட்டை பிடித்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
அதிகளவான கழிவுகளை உண்ணுகின்ற மாடுகள் உடனடியாகவே அந்தந்த இடங்களில் இறந்து விடுவதாகவும், ஓரளவுக்கு உட்கொள்கின்ற மாடுகள் பட்டிக்கு திரும்பிய நிலையில் இரவோ அல்லது மறுநாளோ இறப்பதாகவும் மக்கள் கவலை அடைக்கின்றனர்.

எனவே மக்களுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு முன்  விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்

பிரதேச பொது மக்களால் குறித்த விடயம் 55ஆவது படைப்பிரிவு இரானுவ அதிகாரியிடம் தெரிவித்த போது தான் கவனிப்பதாக கூறப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், தாங்கள் வளர்க்கின்ற மாடுகள் பட்டிகளிலும்,ஆங்காங்கேயும் இறந்து கிடப்பது தங்களுக்கு பெரும் மனவேதனையை அளிப்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு மாடுகள் இறப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி உதவி அரசாங்க அதிபருக்கும் தெரியப்படுத்தி உதவி அரச அதிபரும் வெள்ளிக் கிழமை வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டு சென்றுள்ளார் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரானுவத்தினரால் கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தினை பார்வையிட்டு அறிக்கையிட  ஊடகவியலாளர்கள் சென்ற போது இரானுவத்தினரால் குறித்த இடம் தகரங்க்ள கொண்டு அடைக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு கழிவுக்ள புதைக்கப்பட்டுகொண்டிருந்தாகவும், அதனை புகைப்படம் எடுக்க இரானுவத்தினரால் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாது  திருப்பி அனுப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்._MG_2274 copy _MG_2297 copy _MG_2299 copy _MG_2304 copy IMG_2264 copy
Facebook Comments