முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் செயலர் பிரிவுக்குட்பட்ட தட்டயமலை பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

சம்பவம் குறித்து தெரியவருவதாவது
ஒட்டுசுட்டான் தட்டயமலைப்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி வீரவாகு (வயது60)என்பவர் வேலைக்காக அதிகாலை வேளையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் .வீட்டில் இருந்து சற்றுதூரம் சென்றதும் வீதி ஓரமாக நின்ற காட்டுயானையால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து வீதில் கிடந்த வேளையில் அயலவர்களால் காப்பற்றப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இவருக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் எம்மிடம் தெரிவித்தார் .

இந்தசம்பவம் இடம்பெற்ற தட்டயமலை பகுதி மற்றும் ஒதியமலை ,பனிக்கன்குளம் ,முத்தையன் கட்டு போன்றபிரதேசங்கள் அடிக்கடி காட்டுயானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் பிரதேசம் என்பதோடு குறி த்தபகுதிகளில் யானைகளை கட்டுப்படுத்துவதர்க்காக மக்காளால் மின்சார வேலி அமைத்து தருமாறு சம்மந்த பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தபலனும் இல்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

Facebook Comments