நேற்று வெளியான ஜெயம் ரவியின் மிருதன் படம், முதல்நாளன்று அதிக வசூலை அள்ளியுள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஜெயம் ரவி, அனைவருக்கும் நன்றி. என் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம், மிருதன் என்று ட்வீட் செய்துள்ளார். இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஜெயம் ரவியின் அதிகளவிலான முதல் நாள் வசூல் இது. மித்ரனின் (தனி ஒருவன்) வசூலைத் தாண்டிவிட்டது. வசூல் விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

படத்துக்குச் சாதகமான விமரிசனங்கள் வெளிவந்துள்ளதால், 2016-லும் ஜெயம் ரவியின் வெற்றி ராஜ்ஜியம் தொடர்கிறது என்றே கூறமுடியும்.

Facebook Comments